Posts

செல்லம்மா...

Image
உன் அன்னை தாய்மை உணர கருவில் பூத்து உன் அன்னையின் ஏக்கத்திற்கு கிடைத்த வரம் நீ! உன் அப்பாவின் மனதிலோ இருவரையும் காக்கும் வலி உன்னை கண்ட நொடியிலோ கண்களில் ஆனந்ததுளிகள்! உன் பிஞ்சு முகம் மென்மையான மேனி சிறிய விரல்கள் பொலிவான கண்கள் உன் முகமெல்லாம் மயக்கும் சிரிப்போடு கள்ளமில்லா அன்பினால் அடிமையாக்கினாய்! உன் சின்ன பாதங்களை சுவைத்து தத்தித்தாவி , நீந்தி, தவழ்ந்து உன் தலையை தூக்கி எங்களை தேடி அளப்பரியா மகிழ்ச்சி அளித்தாய்! உன் கால்களை விரித்து அமர்ந்து மெல்ல மெல்ல விழுந்தும் எழுந்துமாய் உன் முதல் அடிகளை வைத்து நடக்கும் எங்கள் வீட்டு செல்வமே... உன்னை காண்கையில் எத்தனை இன்பம்! உன் நிகழ்வுகள் எங்கள் நினைவுகளாய் . . .                                              - கஸ்தூரி சுந்தரமூர்த்தி

மீழ்வோம் மனிதர்களாய்...

சாலை எங்கும் முகமூடி கொள்ளையர்கள்              ஜாக்கிரதை என்ற நிலவரம் மாறி... சாலையில் முகமூடி கொள்ளையர்களாக               மக்கள் அனைவரும்... புறந்தூய்மை அவசியம் என்பதை உணராத               பலருக்கு ஓர் நுண்ணுயிரி... புறந்தூய்மை இல்லையேல் வாழ்க்கை இல்லை             என்று உணர்த்துகிறது... அவசியத்தை விடுத்து ஆடம்பரம்              என்ற அனாவசியத்தில் திலைத்தவர்கள்... அனாவசியத்தை விடுத்து அத்தியாவசியத்தை             மட்டுமே நாடுகிறார்கள்... தன் சுயநலத்தை  பாராமல் பிறர் நலனையும்              உணர்ந்து செயல்படும் எண்ணமும்... தன்னிடம் இருக்கும் பொருளை இல்லாதவர்களுக்கு             பகிர்ந்து உதவும் குணத்தையும் தூண்டுகிறது... உடனிருக்கும் உறவின் அருமை அறியாது சமூக             வலைதளங்களில் உலாவி வந்தவர்களுக்கு...  உடன் இருபவர்களோடு நேரத்தை செலவிட ஒரு       வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது அந்த நுண்ணுயிரி... ஊரெங்கும் உதவும் மனப்பான்மை வளர்கிறது..     நாடெங்கும் நலனில் அக்கறை பெருகுகிறது... உலகெங்கும் மனிதநேயம் ஓங்குகிறது..      நுண்ணுயிரி தாக்கத்தில்லிருந்து மீண்டு எழுவோம்           மனிதர்களாய்...     

Illustration

Image
If you are a tree, have your heart as root , have your brain as branches .

Solitude

Image
Solitude can sometimes make you grow stronger to unknown skills in you...

யாதுமாகி நின்றாள்

பெண்ணே , சுய நலம் ஒழித்து பொது நலம் காத்து அன்பான முகப்பொலிவில் அழகு சேர் ...... நாணத்தோடு சகிப்புத்தன்மையும் அணிகலனாய் ...... சிந்தித்துச் செயல்படும் பக்குவத்தோடு அனைத்தையும் தாங்கும் சக்தி கொண்டு பிறப்பளித்து வாழ்வளிக்கும் உனக்கு நிகர் எவரும் இல்லை ......                                                 சு. கஸ்தூரி

நகர பேருந்துப் பயணம்

இனம் பார்க்காத இன்பம் நகரப் பேருந்தில் காற்றைப்போல் மாறும் எண்ண அலைகள் வேலைப்பழுவால் வருத்தம் நெரிசலால் கோபம் சாலை அறியும் எண்ணம் மெல்ல வருட மென் தூக்கம் செல்பேசியில் செவிமடுக்கும் பேச்சு நிறுத்தம் அறியும் பதற்றம் ஆபத்தை அறியா இளசுகளின் படிப்பயணம் – இது நடத்துனரின் அன்றாடம் நிகழ்வுகள் நினைவுகளாய்...                   -சு.கஸ்தூரி

மலரே பேசு!

மலரே நீ பேசு!! உன்னை ரசித்துச் செல்லும் மனிதர்கள் பல பல... செயலும் எண்ணமும் பல பல... உன்னைக் கிள்ளினாலும் சிரிப்பாய்... அனைவருக்கும் இன்பம் அழிப்பாய் வண்ணங்களும் வசந்தங்களும் பல பல... ஒரு நாட்பொழுதில் தோன்றி மறைவதால் உனக்கு ஏதேனும் வருத்தம் உண்டோ ???                             - சு.கஸ்தூரி